மெரினா கடற்கரையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

மெரினா கடற்கரையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

1 mins read
e7788dc3-ceff-4e62-9013-52ce2b28459b
இம்முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான புதிய, இளம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். - படம்: தினத்தந்தி

சென்னை: மெரினா கடற்கரைப் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பாக, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இம்முறை தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏராளமான புதிய, இளம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

அதை ஏற்று, பல்வேறு அமைப்புகளும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) முதல் சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பாக ‘உங்கள் வாக்கு உங்கள் உரிமை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதில், பொம்மலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், ஹிப்ஹாப் நடனம், ‘கராவோக்கே’ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

குறிப்புச் சொற்கள்
சட்டமன்றத் தேர்தல் 2026வாக்காளர்விழிப்புணர்வுமெரினா கடற்கரை