தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவில்லை: ஓபிஎஸ்

1 mins read
e4b35dbc-c08a-4064-86a0-425d0363f9a7
ஓ.பன்னீர்செல்வம் - படம்: ஊடகம்

திண்டுக்கல்: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை தாம் புறக்கணிக்கவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது ரகசியம் என்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

“திமுகவின் அதிகார அத்துமீறல்கள் இடைத்தேர்தலில் மீண்டும் அரங்கேறும் என்பதால்தான் நாங்கள் வேட்பாளரைக் களமிறக்கவில்லை. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் சக்திகள் இன்று பிரிந்து கிடக்கின்றன.

“இந்த சக்திகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றிபெற முடியும்,” என்று ஓ.பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்