தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு

2 mins read
6fcee448-ef79-4f60-b08f-724e7d6d9e92
பானு பிரகாஷ் எத்துரு. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடைபெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் வேகமெடுக்கும் எனக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள திமுக அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையும். தேர்தல் பணிகள் கடந்த ஆண்டிலேயே தொடங்கிவிட்டன.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர நடவடிக்கையின்போது தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, ஏறக்குறைய 20 லட்சம் பேர் மீண்டும் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

அந்த விண்ணப்பங்கள் பரிலீசிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்ட நிலையில், புதன்கிழமை (பிப்ரவரி 11) துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு சென்னை வருகிறார். அவர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் அவர், வாக்குச்சாவடி, வாக்காளர் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்துடன் புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

பல்வேறு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் என்றும் அநேகமாக இரண்டாம் கட்டத் தேர்தலின்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 2வது வாரத்தின் இறுதியில், அதாவது, ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறக்கூடும் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்