மின்கட்டணம் ரூ.1.61 கோடி: அதிர்ச்சி அடைந்த நெல்லை தொழிலாளி

1 mins read
a57ae7fd-2ef2-49d3-bc0c-6013f6630e97
தொழிலாளி மாரியப்பனின் கைப்பேசிக்கு வந்த மின்வாரியத்தின் கட்டண அறிவிப்பு. - படம்: தமிழக ஊடகம்

நாங்குநேரி: ​திருநெல்வேலி மாவட்டம், நாங்​குநேரி அருகே தொழிலாளி ஒருவரின் வீட்டுக்கான மின்கட்​ட​ண​ம் ரூ.1.61 கோடி என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது.

நாங்​குநேரி அருகே மூலைக்​கரைப்​பட்டி மின் வாரிய கோட்​டத்​துக்கு உட்​பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்​தவர் மாரியப்​பன்.

நால்வரைக் கொண்ட இவரது குடும்பத்துக்கான மின்கட்​ட​ணத்தை கடந்த சில நாள்களுக்​கு​முன் ஊழியர் ஒரு​வர் கணக்​கீடு செய்​து​விட்டுச் சென்​றிருந்​தார்.

அதன் பிறகு, மின்​கட்டண விவரம் மாரியப்​பனின் கைப்பேசிக்கு வந்​துள்​ளது. மின்கட்​ட​ணம் ரூ. 1 கோடியே 61 லட்​சத்து 31 ஆயிரத்து 281 என்று குறிப்​பிடப்​பட்​டு இருந்ததால், மாரியப்​பனின் குடும்​பத்​தினர் அதிர்ச்சி அடைந்​தனர்.

உடனடியாக அவர் இதுகுறித்​து மின்​வாரிய அதி​காரி​களிடம் முறையிட்டார். அதி​காரி​கள் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, தொழில்​நுட்​பக் கோளாறு மற்​றும் மனிதத் தவறு காரண​மாக அதி​கப்​படி​யான மின்​கட்​ட​ணம் வந்​துள்​ளது தெரிய​வந்​தது.

தவறான மின் அளவை திருத்​தம் செய்​து, சரி​யான மின் ​அளவு பதிவேற்​றம் செய்​யப்​பட்டு மாரியப்​பனின் வீட்டு மின் இணைப்​புக்​கான கட்​ட​ணம் ரூ.494 என்று கணக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

குறிப்புச் சொற்கள்