ஈரோடு: வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அத்தொகுதிக்கான தேர்தல் அதிகாரி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் காலமானார். அதனையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
அத்தொகுதியில் ஆளும் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அத்தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக இருந்த மணீஷ்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, அவரை மாற்றம் செய்து தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவருக்குப் பதிலாக ஸ்ரீகாந்த் என்பவர் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தொகுதியில் மொத்தம் 226,433 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.