ஈரோடு கிழக்குத் தொகுதி: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடியாத சூழலில் மக்கள் ஏமாற்றம்

ஈரோடு கிழக்குத் தொகுதி: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடியாத சூழலில் மக்கள் ஏமாற்றம்

1 mins read
a8200052-e9d5-4e9e-bdf5-f3c6499330f4
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: ஈரோடு சட்டசபை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 7ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கரும்பு, அரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை தொடங்கிவைத்தார்.

இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்களை ஏற்கெனவே பெற்றிருந்த மக்கள் நியாய விலைக் கடைகளுக்கு வியாழக்கிழமை காலை வந்திருந்தனர். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீசைப் பார்த்து மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதில், “பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

“அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்,” என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசானது, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்பட்டு இருந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்