ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சீதாலட்சுமி, கடந்த 13 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர்.அவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக - நாம் தமிழர் இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இத்தொகுதியில், திமுக சார்பில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி, 49, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வியல் முடித்தவரான இவரது வெற்றிக்கு உழைக்குமாறு கட்சியினரை சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவரான சீதாலட்சுமியின் கணவர் இரா.செழியன். அரசியல் ஆர்வம் காரணமாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.