தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு

1 mins read
292bf697-de70-48ab-9762-2df410074c81
திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார்.  - படம்: ஊடகம்

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கு பாடுபடுவோம்: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரின் வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாடுபடும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்