ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுரையின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு கணினி முறையில் ஆணைய இணையத்தளத்தின் மூலம் கடந்த 13ஆம் தேதி அன்று 20 விழுக்காடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் 30 விழுக்காடு வி.வி.பேடு கருவி சேர்த்து தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 284, வி.வி. பேடு கருவி 308 கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி துணை சுழற்சி முறையில் கூடுதலாக 568 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தப் பணி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.