அதிகாரிகளிடம் சிக்கிய போலியான 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

அதிகாரிகளிடம் சிக்கிய போலியான 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

1 mins read
aa7f01a3-0da9-4cd7-9362-678c1605182e
மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரத்தின் மாதிரிப் படம். - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சென்​னை​யில் தேர்தல் ஆணையத்தின் பறக்​கும் படை அதி​காரி​கள் ஆங்காங்கே சோதனை​களை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்​ணாநகர் சட்​டமன்றத் தொகு​திக்குக் கீழ்வரும் அரும்​பாக்​கம் 100 அடி சாலை​யில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகனச் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அந்த வழி​யாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்​தனர். அதில் போலியான 100 மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் (இவிஎம்) இருந்​தது தெரிய​வந்​தது.

மேலும் ஒரத்​த​நாடு திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய அறிமுக அட்டைகளும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அவை ஐந்து பெட்டிகளில் இருந்​தன. அவற்றை அதிகாரிகள் பறி​முதல் செய்​தனர்.

பறி​முதல் செய்​யப்​பட்ட இயந்​திரங்​களை தனி​யார் பேருந்து மூலம் ஒரத்​த​நாடுக்கு அனுப்பி வைக்கத் திட்​ட​மிட்டு இருந்​ததும், வாக்குச் சேகரிப்​பின்​போது வைத்​திலிங்​கம் புகைப்​படம் ஒட்​டிய இந்தப் போலி இயந்திரத்தைக் காண்​பித்து வாக்குச் சேகரிக்க திட்​ட​மிட்டு இருந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இந்த விவ​காரம் ஒரத்​த​நாடு தொகு​திக்கு உட்​பட்​டது என்​ப​தால் அந்தத் தொகுதி தேர்​தல் நடத்​தும் அதி​காரிக்​கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகத் ​தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்