உழவர் நலன், நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை

உழவர் நலன், நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை

2 mins read
வாழைக்கு முட்டுக்கொடுக்கவும் காட்டுப்பன்றி சேதத்தை தடுக்கவும் உதவிகள் உட்பட தமிழக வேளாண் வரவுசெலவுத் திட்டத்தில் பல அம்சங்கள்
c06b3716-a21c-4156-9d3c-ea199e2e0035
ஆளில்லா வானூர்தி பயிற்சி, மானியம் வழங்க ‘வான்மகள்’ திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: சமயம்
Google News Preferred Icon

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான வேளாண் வரவுசெலவுத் திட்டத்தை வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்தார்.

அதில், உழவர்கள் எதிர்பார்க்காத பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. உழவர்களுக்குப் பரிசு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நடப்பு நிதியாண்டில் உழவர்களுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படவுள்ளது. இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மண்வளத்தைப் பாதுகாக்க ரூ.122.51 கோடி ‘தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்’, 1 கோடி விவசாயிகளுக்கு ரூ.4 கோடியில் மண்வள அட்டைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுதானியச் சாகுபடியை இருமடங்காக்க ரூ.7.01 கோடியில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ அறிமுகமாகிறது. பயிறு வகைகள், எண்ணெய் வித்துகளில் தன்னிறைவு பெற ரூ.203.64 கோடியும், சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பான ‘வான்மகள்’ திட்டத்தின்கீழ் ஆளில்லா வானூர்திப் பயிற்சி, மானியம் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிர்க்குப் பயிற்சி, மானிய விலையில் ஆளில்லா வானூர்தி

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பழங்கள், காய்கறிகள் மூலிகைச் செடிகள் வளர்ப்பை ஊக்குவிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ 10 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படவுள்ளது.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பழங்கள், காய்கறிகள் மூலிகைச் செடிகள் வளர்ப்பை ஊக்குவிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம்’ 10 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படவுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

ரூ.1.50 கோடி செலவில் 500 பேருக்கு ஆளில்லா வானூர்தியை இயக்கப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தோருக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஆளில்லா வானூர்தி வழங்கப்படும்.

பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டத்தில் கீழ் மாடித் தோட்டங்களை அமைக்க ரூ.10 கோடியும் தமிழ்நாடு தளிர்க்கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் வரவுசெலவுத் திட்டத்தில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண் வரவுசெலவுத் திட்டத்தில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: தினமணி

‘துளித் துளித் தண்ணீர்’ நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு ரூ.785 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

6 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 6,175 ஏக்கரில் வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம், தென்னை பதப்படுத்தும் கழகத்துக்கு ரூ. 22 கோடி, தென்னை சிறப்புத் திட்டத்துக்கு ரூ. 41 கோடி, காளான் உற்பத்திக்கூடங்களுக்கு ரூ. 50 லட்சம், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ. 22 கோடி, மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ரூ. 1.51 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ட்ராபெர்ரி, அவகாடோ, கிவி உள்ளிட்ட உயர் மதிப்புள்ள பழங்கள் உற்பத்திக்கு ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கீடு, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க ரூ.7.35 கோடியில் ‘காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு’ சிறப்புத் திட்டம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

40,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.27.21 கோடி பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், மக்காச்சோள உற்பத்தியைப் பெருக்க ரூ.36 கோடி, 12,500 ஏக்கர் தரிசு நிலங்களை மீட்டுத் தேக்கு, சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரக்கன்றுகள் நட ரூ.17.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.29 கோடியில் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு 10 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுவேளாண்மைவிவசாயம்பயிர்மகளிர்வரவுசெலவுத் திட்டம் 2026வரவுசெலவுத் திட்டம்தமிழகம்