கொள்முதல் விலை போதாது; பாலைக் கொட்டி போராட்டம்

கொள்முதல் விலை போதாது; பாலைக் கொட்டி போராட்டம்

1 mins read
109199f3-a665-46cb-8698-239feba48c17
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி அருகே தரையில் பாலைக் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 50 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாப்பிள்ளைக் கவுண்டன் புதூர் பகுதியில் அமைந்துள்ள பால் கொள்முதல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) காலை வந்த பால் உற்பத்தியாளர்கள், தங்களின் பாலை வழக்கம்போல மையத்தில் வழங்க மறுத்தனர். அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி, தாங்கள் கொண்டுவந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பாலை வீதியிலேயே ஊற்றி தங்களது கடுமையான எதிர்ப்பை அவர்kaL பதிவுசெய்தனர்.

தமிழக அரசு அண்மையில் அறிவித்த ஒரு ரூபாய் ஊக்கத்தொகை உயர்வு மிகவும் ஏமாற்றமளிப்பதாகப் பால் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.53 வரை கொள்முதல் விலை வழங்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை மாடுகளின் பராமரிப்புக்கே போதாது என்று அவர்கள் குறிப்பிட்டனர்,

மாட்டுத் தீவனங்களின் விலை உயர்வால் பால் உற்பத்தியில் தொடர்ந்து நட்டத்தையே சந்தித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்