சென்னையில் விவசாயிகள் முன்னறிவிப்பின்றி திடீர்ப் போராட்டம்

சென்னையில் விவசாயிகள் முன்னறிவிப்பின்றி திடீர்ப் போராட்டம்

படம்: இந்து தமிழ் திசை

08 Aug 2026 - 7:29 pm

1 mins read

சென்னை: முழுப் பயிர்க் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் தமிழக அரசின் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தவெக தலைமையிலான தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பினர் முன்னறிவிப்பு இன்றி இந்த திடீரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய விவசாயக் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று குற்றம்சாட்டினார்.

அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்று முதல்வர் விஜய் கூறியதை நம்பி அவருக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்ட இளங்கீரன், முழுக் கடன் தள்ளுபடி என்று அளித்த வாக்குறுதியை முதல்வர் விஜய் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

“ஒரு குவிண்​டால் நெல்லுக்கு ரூ.3,500ம் கரும்​புக்கு ரூ.4,500ம் கொடுப்​ப​தாகக் கூறினர். ஆனால், கொஞ்​சம்கூட தரவில்​லை. ‘கத்தி’ திரைப்படத்​தில் விவ​சா​யம் குறித்து முதல்வர் விஜய் நிறைய பேசி​னார். ஆனால் முதல்​வ​ராக எங்​களுக்​கு எது​வுமே செய்​ய​வில்​லை,” என்றார் திரு இளங்கீரன்.

குறிப்புச் சொற்கள்