ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மத்திய அரசிடம் இதுகுறித்து பரிந்துரை செய்திருப்பதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னார்.
“இலங்கைக்கான கப்பல் போக்குவரத்துத் திட்டம் ரூ.118 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.
“ராமேசுவரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, 150 கோடி ரூபாயில் புறவழிச்சாலை அமைக்கப்படும். அப்பணிகள் 2026 இறுதிக்குள் முடிவடையும்,” என்று அமைச்சர் கூறினார்.