தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விழாக்காலத்தில் நல்ல விலைக்குப் போகும் சாமந்திப் பூக்கள்

1 mins read
41162fcf-3ffb-42f0-95a3-d0552532a93e
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் சாமந்திப்பூ அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். - படம்: ஊடகம்

ஓசூர்: ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பூக்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் முன்னேற்பாடாக சாமந்திப் பூக்களை அறுவடை செய்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிர்ந்த பருவநிலை காரணமாக மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர்ச் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பெங்களூருக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும்.

நடப்பாண்டில் பருவ மழை கைகொடுத்ததால் சாமந்திப்பூக்கள் அதிக அளவில் விளைந்தன. இதனால், விநாயகர் சதுர்த்தியின்போது உரிய விலை கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, “ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு சந்தையில் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் முன்கூட்டியே சாமந்திப்பூ அறுவடைப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

“மேலும், வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு வந்து பூக்களைக் கொள்முதல் செய்வதால், போக்குவரத்து செலவு குறைந்துள்ளது,” என்றனர்.

குறிப்புச் சொற்கள்