நிதித்துறைச் செயலர்: எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்

2 mins read
7830e230-6047-4205-896d-8d910c80a166
சென்னை மாநிலக் கல்லூரியில் திங்கட்கிழமை நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மாநிலக்​கல்​லூரி தமிழ்த்​துறை மற்​றும் ஆங்​கிலத்​துறை சார்​பில் ‘எழுத்​தாளர் பெரு​மாள்​முரு​கன் அகவை-60’ என்ற தலைப்​பில் ஒரு​ நாள் பன்​னாட்டு கருத்​தரங்​கம் திங்கட்கிழமை நடை​பெற்​றது.

இதில், பெரு​மாள்​முரு​க​னின் படைப்​பு​கள் தொடர்​பாக பல்​வேறு கோணங்​களில் 60 பெண்​கள் எழு​திய 60 கட்​டுரைகளின் தொகுப்பான ‘நன​விலி​யின் நிலம்’ என்ற நூல் வெளி​யிடப்​பட்​டது.

பல்​வேறு தலைப்​பு​களில் நடை​பெற்ற இலக்​கிய அமர்​வு​களில் பேராசிரியர் வில்​லி​யம் ஜான் போஸ்​கோ, எழுத்​தாளர் அ.மங்​கை, இணை பேராசிரியர் கோ.ரகுப​தி, எழுத்​தாளர் ஜனனி கண்​ணன், வழக்​கறிஞர் அ.அருள்​மொழி உள்​ளிட்​டோர் பங்​கேற்று உரை​யாற்​றினர்.

மாலை​யில் நடை​பெற்ற கருத்​தரங்க நிறைவு​விழா​வில் தமிழக அரசின் நிதித்துறை செயலர் உதயச்சந்​திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்​போது பேசிய அவர், “தமிழகத்​தில் மாவட்​டம்​தோறும் புத்​தகக் காட்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன. சென்​னை​யில் பன்​னாட்டுப் புத்​தகக் காட்சி நடத்​தப்​படு​கிறது.

சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்​கப்பட இருந்து கடைசி நேரத்​தில் ரத்​துசெய்​யப்​பட்ட நிலை​யில், அதற்கு எதிர்​வினை​யாக தமிழக அரசு சார்​பில் ஆண்​டு​தோறும் தேசிய அளவில் சிறந்த இலக்​கியப் படைப்​பு​களுக்கு ரூ.5 லட்​சம் பரிசுத்​தொகை​யுடன் செம்​மொழி விருதுகள் வழங்​கப்​படும் என முதல்​வர் அறி​வித்​திருப்​பது தேசிய அளவில் கவனம் பெற்​றிருக்​கிறது.

எழுத்​தாளர்​களை தமிழ்ச்​சமூகம் கௌரவப்​படுத்த வேண்​டும். அவர்​களை மதிப்புடன் நடத்த வேண்​டும். எப்​போதெல்​லாம் மொழிகளுக்குச் சிக்​கல் வரு​கிறதோ அப்​போது அதற்​கான முன்​னெடுப்​பு​களை செய்​வது நமது வழக்​கம். அந்த வகை​யில் தமிழ் மொழி​யில் மட்​டுமின்றி அனைத்து மொழிகளி​லும் சிறந்த படைப்​பு​கள்வர வேண்​டும் என்​ப​தற்காக செம்​மொழி விருதுகள் அறிவிக்கப்​பட்​டுள்​ளன. இந்த முன்​னெடுப்பை அனை​வரும் பாராட்​டு​கிறார்​கள் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்