தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக அமைச்சர்கள் அறைக்குப் பாதுகாப்பு

தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக அமைச்சர்கள் அறைக்குப் பாதுகாப்பு

1 mins read
c6a2f335-2abc-40ab-8a4a-95ad15c619b6
புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தவெக கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் அமைச்சர்களை நேரில் சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  - கோப்புப் படம்: கல்கி ஆன்லைன்

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக, அமைச்சர்களின் அறைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் அமைச்சரின் அறைக்கும் இரண்டு முதல் நான்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வர்.

புதிய அரசு பொறுப்பேற்றது முதல் தவெக கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் அமைச்சர்களை நேரில் சந்திக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், தலைமைச் செயலகம் அருகில் உள்ள சட்டமன்ற வளாகத்துக்கும் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக நுழைவாயில் மட்டுமன்றி, ஒவ்வொரு தளத்திலும் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தலைமைச் செயலக உணவகங்கள், ஆவணங்களைப் பிரதியெடுக்கும் கடைகள் ஆகியவையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்கள், மன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம்.

தற்போது அந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள், செய்தியாளர்கள் என அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்