தமிழக விமானநிலையங்களில் விரலில் அழியாமையுடன் பிடிபட்ட வெளிநாட்டினர்

தமிழக விமானநிலையங்களில் விரலில் அழியாமையுடன் பிடிபட்ட வெளிநாட்டினர்

1 mins read
3442a5da-b021-4b64-b646-f92cedcf4656
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடன் வந்த 15 பேரின் விரலில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. - படம்: நியூஸ்18

சென்னை: சென்னை, மதுரை விமான நிலையங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருந்த 17 பயணிகளின் விரல்களில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கனடா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருந்த 15 பேர் சென்னை விமான நிலையத்திலும் இருவர் மதுரை விமான நிலையத்திலும் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் தகவல்கள் கூறின.

முதலில், அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் முடிந்து விமானத்தில் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர், அதிகாரிகளில் ஒருவர் அவர்களது கையில் அழியா மை இருந்ததைக் கவனித்து அவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். பிறகு காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருந்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்திருந்தனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்கள் எங்கெங்கு வாக்களித்தனர் என்ற விவரங்களும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்