பறிமுதல் செய்யப்பட்ட அரிய விலங்குகள்: நடிகர் விக்ரமுக்குச் சிக்கல்

பறிமுதல் செய்யப்பட்ட அரிய விலங்குகள்: நடிகர் விக்ரமுக்குச் சிக்கல்

1 mins read
85beee73-8e5c-418c-8deb-168dbcd58d19
‘லார் கிப்பான்’ என்ற அரிய வகை குரங்குடன் காட்சியளிக்கும் விக்ரம். - படம்: தினமணி
Google News Preferred Icon

ஈரோடு: திரைப்பட நடிகர் விக்ரமுக்கு அரிய வகை குரங்கை ழங்கிய தொழிலதிபருக்குத் தமிழக வனத்துறை வலைவீசியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்ற அந்தத் தொழிலதிபர் தலைமறைவாகிவிட்ட நிலையில், பெருந்துறை அருகேயுள்ள அவரது பண்ணையில் இருந்து 11 அரிய வகை வெளிநாட்டு வன விலங்குகள் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) பறிமுதல் செய்யப்பட்டன.

பிரபல நடிகர் விக்ரம் அண்மையில் ‘லார் கிப்பான்’ என்ற அரிய வகை குரங்குடன் காட்சியளிக்கும் காணொளி ஒன்று வெளியானது.

அதுபோன்ற அரிய வகை வனவிலங்குகளை இந்தியாவில் வளர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழிலதிபர் கேசவநாதன் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக 11 அரிய வகை வெளிநாட்டு வன விலங்குகளை வளர்த்து வந்துள்ளார்.

அவரிடம் இருந்துதான் நடிகர் விக்ரம் ‘லார் கிப்பான்’ என்ற குரங்குகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், கேசவநாதனிடம் இருந்த ‘லார் கிப்பான்’ குரங்குகளில் ஒன்று ஏற்கெனவே உயிரிழந்ததும் அரிய வகை விலங்குகளைப் பராமரிப்பது குறித்து வனத்துறையிடம் உரிய காலத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் அம்பலமானது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் அனைத்தும் தற்போது அந்த பண்ணையிலேயே வனத்துறையின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறிய பண்ணை உரிமையாளர் கேசவநாதன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்