தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்​னை​யில் மார்ச் 31 வரை இலவச கண் அழுத்தப் பரிசோதனை

1 mins read
b67b54b1-17a0-4df0-81e7-52ab21bb07d0
கண் அழுத்த நோய் பாதிப்பை ஆரம்​பத்​திலேயே கண்​டறிந்து சிகிச்சை பெற்​றால், பார்வைத் திறன் குறைவதைத் தடுக்க முடி​யும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.   - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​துவமனை​களில் வரும் 31ஆம் தேதி வரை கண் மருத்​துவப் பரிசோதனைகள் இலவசமாக செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிளைக்​கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15ஆம் தேதி வரை கடைப்பிடிக்​கப்​படு​கிறது. இதனை முன்​னிட்டு இந்த இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்​ணுக்​குள் அழுத்தப் பரிசோதனை​கள், கண் நரம்பு மதிப்​பாய்​வு​கள், பார்​வை குறித்த சோதனை​கள் போன்​றவை இலவச​மாக மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

‘எதிர்​காலத்தை தெளி​வாகக் காணுங்​கள்’ என்​பதே இந்த ஆண்​டுக்​கான கருப்​பொருள்.

“கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது.

“இந்தப் பாதிப்பை ஆரம்​ப நிலையிலேயே கண்​டறிந்து சிகிச்சை பெற்​றால், பார்வைத் திறன் குறைவதைத் தடுக்க முடி​யும். அலட்​சி​ய​மாக இருந்​தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்​படக்​கூடும்,” என மருத்​து​வர்​கள் எச்​சரித்துள்ளனர்.

இந்​நிலை​யில், சென்​னை​யில் உள்ள அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​களில் வரும் 31ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

கண் அழுத்த நோய் இருப்​பவர்​களுக்கு மருந்​துகள், லேசர் சிகிச்​சை, அறுவை சிகிச்​சைகள் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்​கப்​படும் என்று டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​யின் தலைமை மருத்​துவ அதி​காரி அஸ்​வின் அகர்​வால் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்