ரஷ்யா, உக்ரேனில் அமைதி நிலவ தமிழக கோவில்களில் வழிபாடு செய்யும் தோழிகள்

1 mins read
a92632c5-2cad-478c-b4fb-f0b31e0c03be
தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருமூலர் கோவிலில் வழிபாடு செய்யும் தோழிகள். - படம்: ஊடகம்

சென்னை: ரஷ்யா, உக்ரேன் நாடுகளில் மீண்டும் அமைதி நிலவ வேண்டி, அவ்விரு நாடுகளைச் சேர்ந்த நெருக்கமான தோழிகள் இருவர் தமிழக கோவில்களில் வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த 27 வயதான ஷெனியாவும் உக்ரேனைச் சேர்ந்த 29 வயதான இலியானாவும் நெருங்கிய தோழிகளாவர்.

அண்மையில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இருவரும் தமிழகத்துக்கும் வருகை புரிந்துள்ளனர்.

மேலும், தமிழகத்திலுள்ள முக்கியமான கோவில்களில், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவ வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியில் உள்ள திருநள்ளாறு, திருமணஞ்சேரி, திருநாகேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களில் இருவரும் வழிபாடு செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது இரு நாடுகளில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

அடுத்து மதுரை மீனாட்சி அம்மன், பழனி முருகன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்களுக்கு செல்ல இருப்பதாகவும் அத்தோழிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்