பிளஸ் 1 மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு

பிளஸ் 1 மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு

1 mins read
3637fb57-9d04-4090-a997-7a6c9c185e0f
அமைச்சர் சம்பத்குமார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன மிதிவண்டி வழங்குவதற்கு ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசினார்.

“5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்க 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

“மாணவர் விடுதிகளில் கண்காணிப்புப் படக்கருவிகள், உயிரியல் அடையாளக் கருவிகள் பொருத்தப்பட்டு மாதந்தோறும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“விடுதிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிகளில் தூய்மை, அடிப்படை வசதிகள், உணவின் தரம் ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
சைக்கிள்மாணவர்கள்அமைச்சர்