பிள்ளையார் சிலைகள் கரைப்பு: 120 டன் கழிவுகள் அகற்றம்

பிள்ளையார் சிலைகள் கரைப்பு: 120 டன் கழிவுகள் அகற்றம்

கோப்புப் படம்: நியூஸ் 18

21 Sep 2026 - 8:23 pm

1 mins read

சென்னை: பிள்ளையார் சதுர்த்தியையொட்டி சென்னையில் கரைக்கப்பட்ட சிலைகளால் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகளைச் சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) கடலில் கரைக்கப்பட்டன.

இதன் காரணமாக கடற்கரைகளில் பூசைப் பொருள்கள், மாலைகள், சிலைகளின் எஞ்சிய பாகங்கள், காகிதக்கூழ், மரக்கட்டைகள் பெருமளவில் கழிவுகளாகத் தேங்கின.

இயற்கை நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களின்படி தூய்மைப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மட்டும் ஏறக்குறைய 120 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இப்பணியில் 80க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்