கோயம்புத்தூர்: கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை சோதனைச் சாவடியில் நிறுத்திச் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த கிரண் (28), நபில் (30) மற்றும் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் (30) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோவையைச் சேர்ந்த நாசர் (36), சாதிக் பாஷா (29) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விநியோகம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.