லாரி கவிழ்ந்ததில் வெடித்துச் சிதறிய எரிவாயு உருளைகள்

1 mins read
45aa4080-02d1-4fcc-95b2-94ffb6d72c4d
வெடித்துச் சிதறிய எரிவாயு உருளைகள். - படம்: தமிழக ஊடகம்

அரியலூர்: தமிழ்நாட்டின் அரியலூர் அருகே சமையல் எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) வெடித்துச் சிதறின.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த வாரணவாசி பிள்ளையார் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை காலை (நவம்பர் 11)அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்தப் பகுதியின் சாலையோர வளைவில் அவ்வப்போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் அருகேயுள்ள இன்டேன்ஸ் சமையல் எரிவாயு உருளை கிடங்கில் இருந்து லாரி ஒன்று எரிவாயு நிரப்பப்பட்ட 100க்கும் உருளைகளை ஏற்றிச் சென்றது. அதனை கனகராஜ் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது, வாரணவாசி பிள்ளையார் கோயில் சாலையோர வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி ஓட்டுநர் கனகராஜ் உடனடியாக கீழே குதித்ததில் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

சிறிது நேரத்தில், அழுத்தத்தின் காரணமாக எரிவாயு உருளைகள் ஒவ்வொன்றாக வெடித்துச் சிதற ஆரம்பித்தன. சில உருளைகள் வெடித்து பல்வேறு இடங்களில் சிதறி தூக்கி வீசப்பட்டன.

குறிப்புச் சொற்கள்