திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும்வாயுக் கசிவு; நான்கு மாணவிகள் மயக்கம்

1 mins read
80ce3e06-1b93-485c-9491-0b4727d11354
அச்சத்தில் பெற்றோர். இரண்டாவது முறையாக தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு இரண்டு மாணவிகள் மயக்கமடைந்தனர். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: திருவொற்றியூர் பள்ளி ஒன்றில் திங்கட்கிழமை அன்று (அக்டோபர் 4) மீண்டும் வாயு கசிவால் மாணவிகள் மயக்கமடைந்தனர்.

சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் விக்டோரியா என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த மாதம் 25ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர். இதையடுத்து பள்ளி மூடப்பட்டது.

இதற்கிடையே பத்து நாள்களுக்குப் பிறகு திங்கட்கிழமை (அக்டோபர் 4) மறுபடியும் திறக்கப்பட்டது.

காலை வழக்கம்போல் பள்ளியில் செயல்பட்டு வந்த நிலையில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

பின்னர் அவசர வாகனம் மூலம் திருவொற்றியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.

இரு மாணவிகளின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் ஆய்வகத்தில் இருந்து வாயுக் கசிவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

அதே சமயத்தில் தனியார் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் கேஸ் நிறுவனம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்