தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

1 mins read
4d95c3e9-4db8-4847-8c38-3745eb381017
மருத்துவமனையில் சேர்த்தும் சிறுமி உயிரிழந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுரை: மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் நான்கு வயது ஆருத்ரா எனும் சிறுமி, தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும் தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்க முடியவில்லை.

உடனே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பாளர்கள் 30 நிமிடம் போராடி சிறுமியை மீட்டனர்.

சிறுமி மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில், வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறை, பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் நான்கு ஆசிரியைகளை கைது செய்து காவல்நிலையத்தில் விசாரணை நடத்தியது.

மேலும், மதுரை கே.கே. நகர் தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

குறிப்புச் சொற்கள்