தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவில் நிலத்தில் ஞானசேகரன் வீடு; இடிப்பது குறித்து ஆலோசனை

1 mins read
054728ae-0a88-49ea-a271-82e906eb1d84
ஞானசேகரன். - படம்: ஊடகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன், கோவில் நிலத்தில் வீடு கட்டியது தெரிய வந்துள்ளது.

அந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான 31 சென்ட் நிலத்தில் 16 குடும்பத்தினர், கடந்த 1999ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வருகின்றனர்.

இங்கு 653 சதுர அடி பரப்பில் உள்ள வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரனின் தந்தை தாமோதரன் பெயரில் உள்ளது.

“இந்த 16 வீடுகளையும் நியாய வாடகை வீடுகளாக ஏற்பதா, அல்லது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதா என துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும் அவை அகற்றப்படும்,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.

குறிப்புச் சொற்கள்