சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ரூ.95,200க்கு விற்பனையானது. அதேசமயம், வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.183க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை ஒரு பவுன் ரூ.93,600க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை, கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400க்கும் விற்பனையானது.
பின்னர், பிற்பகலில் மீண்டும் ரூ.800 உயர்ந்துள்ளது. இதன் மூலம், இன்று ஒரே நாளில் (பவுனுக்கு) ரூ.2,400 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதேபோல், வெள்ளி விலையும் காலையில் ரூ.9 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.1.00 வரை உயர்ந்துள்ளது.
இதன் மூலம், இன்று ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.183க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 உயர்ந்து ரூ.1.83 லட்சத்துக்கும் விற்பனையானது.

