சென்னை: தமிழகத் தலைநகர் சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 27) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் 65,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக தினமலர் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் வாரம் துவங்கும் நாளான திங்கட்கிழமை (மார்ச் 24) தங்க விலை சவரனுக்கு ரூ. 120 சரிவடைந்து ரூ 65,720க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 65,480க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதன்கிழமை (மார்ச் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ. 65,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி தந்தது.