சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்தும் வகையில், விரைவில் நவீன மாட்டுக்கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கு வழுக்காத தரைத்தளம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வடிகால், கால்நடைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.
மாடுகளுக்கு நாள் ஒன்றுக்குத் தலா ரூ.10 வீதம் வாடகை வசூலித்து அவற்றைப் பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, பேசின் பாலம் சாலையில் 100 மாடுகளை தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு கணினி நுண்சில்லு பொருத்துவதற்கு சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

