அரசு நிலம் அபகரிப்பு; அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் புகார்

அரசு நிலம் அபகரிப்பு; அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் புகார்

கோப்புப்படம்: ஊடகம்

22 Oct 2024 - 10:29 pm

1 mins read

சென்னை: ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலம் அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநருக்கு அந்த இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.

இதனால், தமிழக அரசியல் களத்தில் மட்டும் அல்லாது, எதிர்க்கட்சியினரின் கூட்டணியிலும் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சரின் பெயர், அவர் அபகரித்த நிலம் ஆகிய விவரங்களை ஆவணங்களுடனும் ஆதாரங்களுடனும் அறப்போர் இயக்கம் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

ரூ.411 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை (சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் இந்த நிலம் உள்ளது) அமைச்சர் ராஜ கண்ணப்பன் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அபகரித்துள்ளதாகவும் அந்த நிலத்தைத் தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநருக்கு அளித்த புகாரில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்