தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுப்புட்டிகளால் ஆளுநர் வருத்தம்

1 mins read
9bda4e68-32bf-43bf-8e9b-6f1051cc1c2f
காந்தி மண்டபத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஆளுநர் ரவி. - படம்: ஊடகம்

சென்னை: காந்தி மண்டபத்தில்கூட மதுப்புட்டிகள் காணப்படுவது வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இம்முறை ஆளுநர் கலந்து கொண்டார்.

அப்போது காந்தி மண்டபத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அவர் மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்லர் என்றும் காந்தி தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்தார் என்றும் குறிப்பிட்டார்.

“காந்தி மண்டபத்தில்கூட மதுப்புட்டிகள் காணப்படுவது வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது பழக்கம். சுத்தமில்லாததால்தான் பல நோய்கள் பரவுகின்றன. அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

குறிப்புச் சொற்கள்