ஆளுநரின் செயல்பாடு மக்களாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால்: ஸ்டாலின்

2 mins read
72c1d2b6-37a1-4129-b553-fe4ce56638a1
மு.க.ஸ்டாலின். - முகநூல், எம்கே ஸ்டாலின்

சென்னை: அரசு தயாரித்து கொடுத்த உரையைப் படிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயல்பாட்டின் மூலம் ஆளுநர் ஆர்என் ரவி தனது பதவியை அவமானப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

தேசபக்தி குறித்து யாரும் திமுகவுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசும்போது முதல்வர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறும் ஆளுநர் ரவி திரும்பத் திரும்ப ஒரே காரணத்தை மட்டுமே முன்வைப்பதாக திரு ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

“கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தமிழக அரசு செயல்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப்பற்றிலும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நாங்கள். தேச பக்தி குறித்து யாரும் பாடம் எடுக்கின்ற நிலைமையில் நாங்கள் இல்லை. தேசபக்தி பாடம் எடுக்கும் அளவுக்கு தேசத்துக்காக அவர்கள் போராடியவர்களும் இல்லை.

“கடந்த நிதியாண்டில் 11.19 விழுக்காடு அளவுக்கு நாட்டிலேயே உயரிய பொருளியல் வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளியல் வளர்ச்சியை எட்டியுள்ளது,” என்று ஸ்டாலின் கூறினார்.

இந்தக் கணக்கைச் சொல்வது திமுக அரசு அல்ல என்றும் மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்ட தகவல் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்