தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்: தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்

2 mins read
47511fce-1deb-4ddc-9b64-978c47115600
பட்​டாபிராமில் இன்று ​திறக்கப்பட உள்ள டைடல் பார்க் கட்​டடம். - படம்: ஊடகம்

சென்னை: பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட டைடல் பார்க்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வியாழக்கிழமை (நவம்பர் 21) திறந்து வைத்தார்.

தகவல் தொழில்​நுட்பத் துறை​யில் பணிபுரி​யும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்​டத்​திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்​கும் வகையில், சிறிய நகரங்​களில் டிட்கோ மற்றும் எல்காட் நிறு​வனம் இணைந்து உருவாக்கி உள்ள டைடல் பார்க் நிறு​வனம் சார்பில், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களுக்கான (ஐ.டி.) உள்கட்​டமைப்பு வசதிகள் ஏற்படுத்​தப்​படு​கின்றன.

அதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் 21 மாடிகளைக் கொண்ட டைடல் பார்க் கட்டடத்தைக் கட்ட கடந்த 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்​டப்​பட்​டது. ரூ.279 கோடி செலவில் 5.57 லட்சம் சதுர அடி பரப்​பள​வில் இக்கட்டடம் கட்டப்​பட்​டுள்​ளது.

இந்தக் கட்​டடத்​தில் ஒரே நேரத்​தில் 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்​தக்​கூடிய வசதி, உணவகங்காடி (ஃபுட் கோர்ட்), 24 மணி நேரக் கண்காணிப்பு பாது​காப்பு வசதி, பலபயன் அரங்​கம், உடற்​ப​யிற்சிக் கூடம், உள்விளை​யாட்டு அரங்​கம், தியானம் செய்​வதற்கான அறை, மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்​வதற்கான வசதி, மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்​யப்​பட்​டுள்ளன.

கட்டடத்​தின் மாடி​யில் தோட்டமும் சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்திய பசுமைக் கட்டட மன்றம் (ஐஜிபிசி) பிளாட்​டினம் தர மதிப்​பீடு செய்​யப்​பட்ட பசுமைக் கட்டடக் கருத்தின் அடிப்​படை​யில் கட்டப்​பட்​டுள்​ளது.

இக்கட்​டடத்​தின் 13 மற்றும் 16வது மாடிகளுக்கு இடையே தொங்கும் தோட்டம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த இரு மாடிகளில் அலுவலகம் அமைக்​கும் நிறு​வனங்​களுக்கு பிரீமியம் கட்டணம் வசூலிக்​கப்​படும்.

இதுகுறித்து, டிட்கோ நிறுவன அதிகாரிகள் கூறுகை​யில், “இந்த டைடல் பார்க் மூலம் ஐந்து ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். இதுவரை இரண்டு நிறுவனங்கள் முன்​ப​திவு செய்​துள்ளன,’’ என்றனர்.

இதுகுறித்து, பட்டாபிராம் பகுதி​யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன் கூறுகை​யில், “பட்​டாபிராமில் டைடல் பார்க் அமைக்கவேண்​டும் என்ற எங்களது 14 ஆண்டுகால கனவு நிறைவேறி​யுள்​ளது. 40 ஏக்கர் பரப்​பளவு உள்ள இந்த இடத்​தில் 11 ஏக்கர் பரப்​பள​வில்​தான் டைடல் பார்க் கட்டப்​பட்​டுள்​ளது.

“எஞ்​சிய ​காலி இடத்​தி​லும் டைடல் பார்க் கட்டவேண்​டும். இதன்மூலம், பட்​டாபிராமைச் சுற்றி​யுள்​ள பகு​தி​கள்​ வளர்​ச்​சி அடைவதோடு, அரசுக்​கும்​ வரு​வாய்​ கிடைக்​கும்,” என்​றார்​.

குறிப்புச் சொற்கள்