ஈரோடு: பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் ஆசிரியா் உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அந்தோணி ஜெரால்ட் (49) என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார்.
வழக்கம்போல் புதன்கிழமை பள்ளிக்கு வந்தவர் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வகுப்புக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
அதைக் கண்ட சக ஆசிரியா்கள் அவரை மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பிவைத்தனா்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்தோணி ஜெரால்ட் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் மலைப்பகுதி ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

