சென்னை: தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் வியாழன், வெள்ளி (மே 29, 30) ஆகிய இரு நாள்களில் கனமழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக நீலகிரி, கோவையில் மிக அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மிக உயர்ந்த எச்சரிக்கையான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மிக அதிக அளவில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14செமணிப்பூர்: ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக டி மீட்டர், சாம்ராஜ் எஸ்டேட், மேல் பவானி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதிகள் ஒவ்வொன்றிலும் 13 சென்டி மீட்டர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, காக்காச்சி பகுதிகளில் 12சென்டி மீட்டர், கோவை மாவட்டம் சோலையார் பகுதியில் 11 சென்டி மீட்டர், திருநெல்வேலி மாஞ்சோலை, நீலகிரி குந்தா பாலம் போன்ற இடங்களில் 10 சென்டி மீட்டர் என மழை பொழிந்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் வியாழன், வெள்ளி இரு நாள்களிலும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மிக உயர்ந்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கன மழை பெய்வற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில், வியாழனன்று மேக மூட்டமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், வியாழன், வெள்ளி நாட்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்பொழுது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.