15 மாவட்டங்களில் கனமழை

15 மாவட்டங்களில் கனமழை

1 mins read
570dd0fd-b5b4-4e89-98c3-d94f6d021d33
அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சிவகங்கை, ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வரும் 10ஆம் தேதி வரை, 15 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்