சேலம்: தை 1ஆம் தேதி முதல் பழனி புனித நடைப்பயணம் தொடங்கியது. தமிழகத்தின் தலைநகரம் சென்னை மற்றும் மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் பழநியை நோக்கி தங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
சேலத்தில் இருந்து புறப்பட்ட குழுவினர் ஜனவரி 1ஆம் தேதி புறப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி தை 5ஆம் நாள் பழனி அடிவாரத்தில் உள்ள கந்தன் கோயிலில் இருமுடியை செலுத்தி கடவுளை வழிபட்டு பின்னர் பழனிமலைக்குச் சென்று முருகனை வணங்கி வழிபாடு செய்து வீடு திரும்புவர்.
இருமுடியில் கொண்டு செல்லும் விபூதிகளை பழனி மலையடிவாரத்தில் உள்ள கந்தன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்த பின்னர் பக்தர்கள் மீண்டும் அக்கோயிலின் விபூதியுடன் கலந்து எடுத்து வீடுகளுக்கு எடுத்துச்செல்வர்.

