தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் கார் நிறுவனம்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் கார் நிறுவனம்

1 mins read
b270ccb8-4a30-4299-9682-87ed93a76b08
அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மின் வாகனங்களை ஹுண்டாய் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மின் வாகனங்களை இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான கட்டமைப்பை தமிழகத்தில் உருவாக்கும் நோக்கத்துடன் அந்நிறுவனம் இத்தொகையை முதலீடு செய்ய இருப்பதாக ஹுண்டாய் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கும் ஹுண்டாய் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் இப்புதிய முதலீட்டின் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு, குறிப்பாக இளையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஜப்பானைச் சேர்ந்த நிறுவனங்களும் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகள் செய்யும் என எதிர்பார்ப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.