சென்னை: நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறுக் கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உறுதியளித்துள்ளார்.
தம்மை பற்றி நடிகர் சிங்கமுத்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி நடிகர் வடிவேலு ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற விசாரணையில், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறாக பேசுவதாக வடிவேலு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதற்கு சிங்கமுத்து தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது, அதற்கான உத்தரவாத மனுத் தாக்கல் செய்யவேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள அவதூறுக் காணொளிகளை நீக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து வடிவேலு குறித்து அவதூறு பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அடங்கிய மனு ஒன்று சிங்கமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
நடிகர் வடிவேலு, சிங்கமுத்து இருவரிடையே நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.