தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலக்கை அடையும் வரை உறுதியாகச் செயல்படுவேன்: டிடிவி தினகரன்

1 mins read
a62e32c8-e7ee-4ac6-8b38-9a368a2229e5
டிடிவி தினகரன். - படம்: ஊடகம்

ராணிப்பேட்டை: யாரும் தம்மை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டையில் அமமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், அமமுக எப்போதும் யாரிடமும் மண்டியிடாமல், சமரசம் செய்துகொள்ளாமல் இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆகையால், என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம்.

“நான் அமைதியானவன், பொறுமையானவன்தான். அதேநேரத்தில் அழுத்தமானவன். அமமுகவின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து உறுதியாகச் செயல்படுவேன்,” என்றார் தினகரன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி பிரதமராகத் தேர்வாக வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்ததாகவும் அதற்காகவே அக்கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததாகவும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்