துணிச்சல் இருந்தால் மாணவர்கள் சாதிக்கலாம்: ஆளுநர் ஆர்.என். ரவி

துணிச்சல் இருந்தால் மாணவர்கள் சாதிக்கலாம்: ஆளுநர் ஆர்.என். ரவி

1 mins read
efee4cfc-9bec-4a54-8f5a-76818e6ec8ba
‘பரிக் ஷா பே சர்ச்​சா’ நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

சென்னை: தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு பள்ளி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆலோசனை வழங்கி உள்ளார்.

இந்திய அளவில் பள்ளி மாணவர்​களிடம் மன அழுத்​தம் இல்​லாத சூழலை உரு​வாக்க பிரதமர் மோடி தலை​மை​யில் ‘தேர்வு வீரர்​கள்’ என்ற இயக்​கம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

அந்த இயக்​கம் சார்​பில் ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) திருவள்ளூரில் நடை​பெற்​றது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் திரு​வேற்​காடு பகு​தி​யில் உள்ள ஆர்​எம்கே பள்​ளி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்​.என்​. ரவி சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்​றுப் பேசினார்.

அந்த நிகழ்வில் 1,500க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​யர் கலந்துகொண்டனர்.

ஆளுர் ரவி பேசுகையில், “மாணவ, மாண​வியர் தினமும் அதி​காலை​யில் எழுந்​து, உடற்​பயிற்​சியும் யோகப் பயிற்சியும் செய்யவேண்​டும்.

“கடின​மான பாடங்​களைப் படிக்க வேண்​டும். நல்ல பழக்கங்கள், கடின​மான தேர்​வு​களை எதிர்​கொள்ள உதவி​யாக இருக்​கும்.

“தேர்வில் வினாத்​தாளை வாங்​கியதும் தெரி​யாத கேள்வி​களைப் பார்த்து பதற்றப்​படக் கூடாது.

“நாம் நினைத்​தது நடை​பெறா​விட்​டால், அதைத் தோல்​வி​யாகக் கருதாமல் சிறு பின்​னடை​வாகவே கருதவேண்​டும்.

“சாதிக்க வேண்டுமாயின் மீண்​டும் முயற்சி செய்​ய வேண்டும்.

“சாதனை​யாளர்​களின் சுயசரிதையைப் படித்​து, அதை ஊக்​க​மாக எடுத்துக் கொள்​ளுங்​கள்,” என்றார் அவர்.

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், தேர்வை துணிச்சலுடன் எதிர்​கொள்​வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழு​திய ‘தேர்வு வீரர்​கள்’ என்ற புத்​தகத்​தை அவர்களுக்கு வழங்​கி​னார்​.

குறிப்புச் சொற்கள்