ஸ்ரீவில்லிபுத்தூர்: தேதியைச் சொன்னால் கிழமையைக் கூறும் பள்ளி மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பழனி செல்வம், குருலட்சுமி தம்பதியரின் மகனான சத்குருநாதன் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கற்றல் குறைபாடு உள்ளவர்.
இந்தச் சிறுவனிடம் 50 ஆண்டுக்குமுன் உள்ள ஆங்கிலத் தேதியைக் கூறினால், உடனடியாக அதற்குரிய கிழமையையும் தமிழ் மாதத் தேதியையும் கூறுகிறார்.
2050 ஜனவரி மாதத் தேதிகளுக்கான அட்டவணையை உருவாக்கச் சொன்னால் சத்குருநாதனால் அதையும் சில நிமிடங்களில் தயார்செய்ய முடிகிறது.
மேலும் பொங்கல் பண்டிகை, தீபாவளி, குடியரசு தினம் என அனைத்து முக்கிய நாள்களுக்கான கிழமைகளையும் சரியாகக் குறிப்பிடுகிறார் சத்குருநாதன்.

