தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை

1 mins read
4a5b5e14-7c8d-4b15-af14-00ab1b71754a
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை. - கோப்புப்படம்: ஊடகம்

நாகர்கோவில்: 2026ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெல்லும் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த திரு செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறினார்.

வரும் தேர்​தலில் கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் காங்​கிரசுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

ஆனால், கூட்​டணி குறித்​தும், எந்தத் தொகு​தி​களைக் கேட்க வேண்​டும், எவ்​வளவு தொகுதிகளைக் கேட்க வேண்டும் போன்​றவை குறித்​தும் கட்​சி​யின் அகில இந்​திய தலை​மை​தான் முடிவு செய்​யும். எனினும், வரும் தேர்​தலில் 200 இடங்​களுக்கு மேல் இண்​டியா கூட்​டணி வெற்​றி​பெறும். தவெக தலை​வர் விஜய், மதவாத சக்​தி​களிடம் மாட்​டிக் கொள்​ளக்கூடாது.

பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாதக் கட்​சி. காங்​கிரஸ் கட்சியோ எல்லாத் தரப்பு மக்களுக்கான கட்​சி, ஜனநாயகத்தை விரும்​பும் கட்​சி. தேர்​தலை மட்​டும் குறிக்கோளாகக் கொண்டு காங்​கிரஸ் செயல்​படு​வ​தில்​லை. மக்​கள் நலனைக் கருத்​தில் கொண்டே செயல்​படு​கிறது என்று கூறினார். பேட்​டி​யின்​போது நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ரூபி, சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உடனிருந்​தனர்.

குறிப்புச் சொற்கள்