புதுடெல்லி: தேர்தல் அறக்கட்டளை வாயிலாக கடந்த ஓராண்டில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் பலநூறு கோடி ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளன.
அந்த வகையில் கடந்த 2024-25ல் பாஜக ஆக அதிகமாக ரூ.3.826 கோடி பெற்றுள்ளது. இது இந்திய அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் பெற்ற தொகையில் 82% (ரூ.3,157 கோடி) ஆகும். இத்தகவலை இந்திய ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத் திட்டத்தை மத்திய பாஜக அரசு முதன்முறை அறிமுகம் செய்தது. எனினும் இதற்கு சில தரப்பினர் பின்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திட்டத்தையடுத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் முடிவில் தேர்தல் பத்திரத்திட்டம் செல்லாது என கடந்த 2024ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அரசியலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் பத்திரத் திட்டத்துக்கு மாற்றாக கடந்த 2024-2025 நிதியாண்டு முதல் அரசியல் கட்சிகள் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக நன்கொடைகளைப் பெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2024-24 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான ஏடிஆர் எனப்படும் விரிவான அறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், அக்குறிப்பிட்ட நிதியாண்டில் பெரிய நிறுவனங்கள், தனி நபர்கள் மூலம் அரசியல் கட்சிகள் ரூ.3,826 கோடியை தேர்தல் அறக்கட்டளை மூலம் பெற்றுள்ளன. மொத்த தொகையில் பாஜக மட்டும் ரூ.3,157 கோடியை (82%) பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.298 கோடி (7.81%) கிடைத்துள்ளது.
மொத்த நிதியில் திரிணாமூல் காங்கிரஸ் ரூ.102 கோடி (2.67%), பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 19 கட்சிகள் ரூ.267 கோடியைப் பெற்றுள்ளன.
அறக்கட்டளைகளைப் பொறுத்தவரை ‘ப்ரூடண்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ ஆக அதிகமாக ரூ.2,668 கோடியை 15 அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ளது.
மாநில வாரியாக மகாராஷ்டிராவில் உள்ள அரசியல் கட்சிகள் ரூ.1,225 கோடியும், தெலுங்கானா ரூ.358 கோடியும் பெற்றுள்ளன.
மூன்றாம் இடத்தில் உள்ள ஹரியானா ரூ.212 கோடியும், மேற்கு வங்க மாநிலம் ரூ.203 கோடியும் பெற்றுள்ளன.

