'துணிவு' படம் பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி

'துணிவு' படம் பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி

1 mins read
1a7c18d3-85c2-44c0-b399-aece253bb497
கொள்ளையனைக் காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லும் அதிகாரிகள். படம்: தமிழக ஊடகம் -

திண்டுக்கல்லில் பட்டப் பகலில் ஊழியர்களைக் கட்டிப்போட்டு அவர்கள் மீது மிளகாய்ப் பொடியை வீசி வங்கி ஒன்றில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களின் உதவியோடு வங்கி மேலாளர் கொள்ளையனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், கொள்ளை அடிக்க வந்த இளையர் திண்டுக்கல் மாவட்டம், பூச்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அணில் ரகுமான் என்பது தெரியவந்தது.

வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் 'துணிவு' திரைப்படத்தைப் பார்த்து, அதில் வரும் காட்சிகளைப் போன்று வங்கியில் கொள்ளையடிக்க வந்ததாக அணில் ரகுமான் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இந்த துணிகரச் சம்பவம் நிகழ்ந்தது.