பயிர்க்கடன் நிலுவைத் தொகையைச் செலுத்தினால் வட்டி தள்ளுபடி

பயிர்க்கடன் நிலுவைத் தொகையைச் செலுத்தினால் வட்டி தள்ளுபடி

கோப்புப் படம்: சர்பரங் இந்தியா

25 Nov 2026 - 5:36 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள், தங்களுக்குரிய தள்ளுபடித் தொகை நீங்கலாக மீதமுள்ள நிலுவைக் கடனை நவம்பர் 30ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தி, புதிய பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் தங்கள் பயிர்க்கடன் நிலுவைத் தொகையை நவம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் வசதிக்காக வரும் நவம்பர் 28, 29 ஆகிய விடுமுறை நாள்களிலும் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள் திறந்திருக்கும் என்றும் நிலுவைக் கடனைச் செலுத்தும் விவசாயிகள், புதிய பயிர்க்கடனைப் பெற்றுக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரை 5,70,942 விவசாயிகளுக்கு ரூ.5,190 கோடி அளவுக்குப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூடுதல் விவரங்கள், வழிகாட்டுதல்களுக்கு விவசாயிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்