ஈரோடு: அனைத்துலக இட்லி தினம் மார்ச் 30ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக, தமிழகத்தில் ஈரோடு மாவட்ட மக்கள் இந்நாளை கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
காய்கறி, பழங்கள், பூக்களுக்கு இருப்பதுபோல் ஈரோடில் இட்லிக்கு எனத் தனிச்சந்தை உள்ளது.
அங்குள்ள கருங்கல்பாளையம் இட்லி சந்தையில், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இட்லி வியாபாரம் களைகட்டுகிறது.
ஈரோட்டில் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு இங்கிருந்துதான் இட்லி விநியோகிக்கப்படுகிறது.
நாள்தோறும் இச்சந்தையில் ஏறக்குறைய 10,000 இட்லிகள் விற்பனையாகின்றன.
ஆவி பறக்கத் தயாராகும், மிருதுவான இட்லிக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
கொரோனா நெருக்கடி வேளையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ஈரோடு இட்லிகள் லட்சக்கணக்கான குடும்பங்களின் பசியைப் போக்கியதில் முக்கியப் பங்கு வகித்தன.
தொடர்புடைய செய்திகள்
தனபாக்கியம் என்ற மூதாட்டிதான் இட்லி சந்தையின் பிதாமகள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர் ஏழைகளும் வயிறார உண்ணும் வகையில் வெறும் 25 காசுக்கு இட்லி விற்றவர்.