தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஐடி ஊழியர் சென்னையில் கைது

1 mins read
bb9942b5-63b8-41a6-90cd-59352d9b7f11
ஜுபைர், அவரது நண்பரை சென்னை காவல்துறை கைது செய்தது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்ட தகவல் கிடைத்ததையடுத்து, தொழில்நுட்பப் பொறியாளரை சென்னை காவல்துறை கைது செய்தது.

35 வயதான ஜுபைர் ஹேங்கர்கேகர் என்ற அந்த ஆடவர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுந்ததால், கடந்த ஒருமாத காலமாக பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் (ஏடிஎஸ்) கண்காணிப்பில் இருந்து வந்தார்.

புனே நகரில் இருந்தபடி அவர் அல்-கய்டா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட சில அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்திய இளையர்களை நாட்டுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியதும் உறுதியானது.

ஜுபைரின் வீட்டில் சோதனை செய்தபோது தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இளையர்களை தூண்டுவதற்காக அவர் பயன்படுத்திய பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

முன்னதாக, ஜுபைரும் அவரது நண்பரும் சென்னை சென்றுள்ளனர். அங்கு இருவரையும் காவல்துறை கைது செய்தது.

விசாரணையின்போது சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாக இருவரும் கூறினர். இதனையடுத்து பயங்கரவாதத் தடுப்புக் குழுவால் கைது செய்யப்பட்ட இருவரும் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்